search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரஜ் சோப்ரா"

    • உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
    • பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    சென்னை:

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவரது வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர்.

    சர்வதேச போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா! உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் இரண்டாம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமையடைகிறது' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
    • கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார்.

    அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.


    நீரஜ் சோப்ரா

    நீரஜ் சோப்ரா

    கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 10வது இடத்தை (78.72 மீ) பிடித்தார்.

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்

    ஆண்டர்சன் பீட்டர்ஸ்


     தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
    • இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.

    இதில் இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்சில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார். 'பி' பிரிவில் மற்றொரு அந்நிய வீரர் ரோகித் யாதவ் இடம் பெற்று இருந்தார்.

    இதில் 83.50 மீட்டர் இலக்கை எட்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவாக சிறந்த திறனை வெளிப் படுத்தும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

    நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். 2019-ம் ஆண்டு 2-வது சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க வில்லை.

    'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்தார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ரோகித் யாதவ் 11-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கிரெணடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ( பி பிரிவு) 89.91 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பெற்றார்.

    12 பேர் பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    டிரிபிள் ஜம்ப்பில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் எல்டோஸ் பால் முன்னேறினார். அவர் தகுதி சுற்றில் 16.68 மீட்டர் தாண்டினார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த அவர் 6-வது இடத்தை பிடித்தார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ஒருவராக அவர் வந்துஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற இந்தியர்களான பிரவீன் சித்தரவேல் (16.49 மீட்டர்) அப்துல்லா அபுபக்கர் (16.45 மீட்டர்) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    • நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

    • ஒலிம்பிக் தங்க பதக்கத்திற்கு பின் அவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளார்.
    • தொடர் மழைக்கு இடையே பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    ஹெல்சின்கி:

    பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை.

    2வது முயற்சியில் சோப்ரா தவறு செய்தார்.

    3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார்.

    போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.

    ×